மாதேஸ்வரர் கோவில் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஊட்டி: பந்தலூர் அருகே தேவாலா ஹட்டியில், 378 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதன் ஆண்டு விழா கடந்த 20ஆம் தேதி கோவில் தர்மகர்த்தா இல்லத்திலிருந்து துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.21ல் மகா கணபதி ஹோமத்துடன், கொடியேற்றுதல் மற்றும் தர்மகர்த்தா இல்லத்திலிருந்து சில்லானை ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் அன்னதானம் வழிபாடு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.23 ல் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக வழிபாடுகள் நடத்தப்பட்டதுடன் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஹட்டி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களின் பாரம்பரிய நடன நாட்டிய நிகழ்ச்சிகள், இரவில் ஆண்கள் பங்கேற்ற கோலாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டன. இதில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ராமு கவுடர் தலைமையிலான கமிட்டியினரும், ஊர் பொதுமக்களும் செய்து இருந்தனர்.