பகவதி அம்மன் கோயில் திருவிழா
ADDED :1327 days ago
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை பகவதி அம்மன் கோயில் கடைசி நாள் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
பெரியகுளம் வடகரை மலைமேல் வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது இதன் உப கோயில் பகவதி அம்மன் கோயில் வடகரையில் அமைந்துள்ளது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. கோயில் திருவிழா மார்ச் 8 ல் சாட்டுதல் நிகழ்ச்சியுடன், மார்ச் 14 ல் திருவிழா துவங்கியது. பத்து நாட்கள் நடந்த திருவிழாவில் தினமும் மண்டகப்படிதார்கள் ஏற்பாட்டில் அம்மன் இரவு 7.00 மணி வீதி உலா வந்தார். நேற்று 10 ம் நாள் திருவிழாவில், பக்தர்கள், பால்குடம், மாவிளக்கு, முளைப்பாரி, தீச்சட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர். மார்ச் 29 ல் மறு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் நரசிம்மன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.