உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோவிலில் வண்ண ஜாலம்: புதுப்பொலிவு பெறும் தூண்கள்!

ராமேஸ்வரம் கோவிலில் வண்ண ஜாலம்: புதுப்பொலிவு பெறும் தூண்கள்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மூன்றாம் பிரகாரம் தூண்களில் வண்ணம் பூசும் பணி துவங்கியது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம், அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. கோவில் மூன்றாம் பிரகாரத்தை வண்ணச் சித்திர பிரகாரமாக மாற்ற, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி, 25 லட்சம் ரூபாயில், மூன்றாம் பிரகாரத்தில், கமலம் "பெயிண்டிங் பணிகள் நடந்து வரும் நிலையில், பிரகாரத்திலுள்ள தூண்கள், தூண்களுக்கு இடையே உள்ள சுதை சிற்பங்களுக்கு, வண்ணம் பூசும் பணி துவங்கியுள்ளது. மூன்றாம் பிரகாரம் தெற்கு பகுதியில், வண்ணப் பணிகள் முடிந்து தூண்கள், சிலைகள் புதுப்பொலிவை பெற்றுள்ளன. இதையடுத்து, மூன்றாம் பிரகாரம் மற்றும் திருக்கல்யாண மண்டபம், அனுப்பு மண்டபம், சொக்கட்டான் மண்டபம் உள்ளிட்ட பகுதி தூண்கள் மற்றும் தூண்களில் அமைந்துள்ள சிற்பங்கள், சேதுபதி மன்னர்களின் சேதமடைந்த சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு, வண்ணம் பூசும் பணி நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !