பழநி கோயிலில் காணிக்கை ரூ.3 கோடியே 58 லட்சம்
ADDED :1371 days ago
பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 58 லட்சம் கிடைத்துள்ளது.பழநியில் மலைக்கோயிலில் மார்ச் 24 25ல் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் நேற்று (மார்ச் 25ல்) காணிக்கையாக 533 கிராம் தங்கம் 3 ஆயிரத்து 359 கிராம் வெள்ளி கிடைத்தது. பணமாக ரூ.ஒரு கோடியே 2 லட்சத்து 43 ஆயிரத்து 10 மற்றும் 51 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்தன.மொத்தம் 1341 கிராம் தங்கம் 13 ஆயிரத்து 382 கிராம் வெள்ளி கிடைத்தது. பணமாக ரூ.3 கோடியே 58 லட்சத்து 87 ஆயிரத்து 920 மற்றும் 179 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கை கிடைத்துள்ளது. இப்பணியில் இணை ஆணையர் நடராஜன் உதவி ஆணையர் செந்தில்குமார் பலர் பங்கேற்றனர்.