எக்கலா தேவி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா
தளவாய்புரம்: ராஜபாளையம் அடுத்த சேத்துார் எக்கலா தேவி அம்மன் கோயில் பங்குனி பொங்கலை முன்னிட்டு பூங்குழி திருவிழா நடந்தது.
கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழா நாட்களில் நேர்த்திக்கடன் வைத்த பக்தர்கள் மாவிளக்கு, அங்கபிரதட்சணம், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்திக்கடனை செலுத்தினர். சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று பூக்குழி திருவிழாவை முன்னிட்டு காலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. அம்மனுக்கு காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி ஏற்பாடு செய்திருந்த இடத்தில் குவிந்தனர். அலங்காரத்தில் இருந்த அம்மன் தேர் சுற்றி வந்ததும் மாலை 7:00 மணிக்குஆண் பெண் என் ஒருவர் பின் ஒருவராக பூக்குழி இறங்கி விரதங்களை முடித்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.