உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்துார் மாரியம்மன் காளியம்மன் கோவில் பொங்கல் விழா துவங்கியது

சாத்துார் மாரியம்மன் காளியம்மன் கோவில் பொங்கல் விழா துவங்கியது

சாத்துார்: சாத்தூர் ஸ்ரீ மாரியம்மன கோவில், ஸ்ரீ காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

சாத்தூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் ஸ்ரீ காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைவதால் தொற்று நோய் பரவியதால் பங்குனிப் பொங்கல் திருவிழா நடைபெறவில்லை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை 8:30 மணியளவில் பங்குனி பொங்கல் கொடியேற்று விழா நடைபெற்றது இதனை தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் ஆராதனை நடைபெறும் மாலை நேரங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும் பல்வேறு மண்டகப்படியார்கள் சார்பில் திருவிழா கலை நிகழ்ச்சிகள் பூஜைகள் நடைபெறவுள்ளது. வரும் ஏப்ரல் 3ம் தேதி பொங்கல் விழா, பூக்குழி திருவிழா நடைபெறவுள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ரவி, மற்றும் விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர். திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நிகழ்ச்சியில் கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் பல்வேறு சமுதாய தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !