உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலூர் கோவில்களில் புத்தாண்டு தரிசனம்; சிறப்பு பூஜை

கூடலூர் கோவில்களில் புத்தாண்டு தரிசனம்; சிறப்பு பூஜை

கூடலூர்; கூடலூரில் உள்ள கோயில்களில் புத்தாண்டை முன்னிட்டு நடந்த, சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மேல்கூடலூர் சந்தக்கடை மாரியம்மன் கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள், அதிகாலை முதல் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர். கூடலூர் விநாயகர் கோவில், காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை தரிசனம் செய்தனர். புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி முனிஸ்வரன் கோவிலில், காலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த முனீஸ்வரை தரிசனம் செய்து சென்றனர். இதேபோன்று, கிராமங்களில் உள்ள கோவில்களிலும், புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !