தீப ஒளியாய் காட்சியளித்த அம்மன்: திருவிளக்கு பூஜை செய்து பெண்கள் வழிபாடு
ADDED :1328 days ago
கோவை: கோவை, பாப்பநாயக்கன்பாளையம், சப்பானி மாரியம்மன் கோவிலில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் தீப ஒளியாய் உற்சவ அம்மன் காட்சியளித்தார். நடந்த திருவிளக்கு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.