உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் வழிபாடு: இன்று முதல் 4 நாட்கள் அனுமதி

சதுரகிரியில் வழிபாடு: இன்று முதல் 4 நாட்கள் அனுமதி

வத்ராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு இன்று (மார்ச் 29) முதல் ஏப்ரல் 1 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படவுள்ளதாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு இன்று முதல் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டுவருவதை தவிர்க்கும்படி வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு கட்டுப்பாடுகளும், வழிகாட்டு விதிமுறைகளும் இருந்த நிலையில் தற்போது முழு அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்பு, முதல் முறையாக எவ்வித நிபந்தனையுமின்றி மலையேற அனுமதிப்பது சதுரகிரி பக்தர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !