உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சற்குரு கணபதி சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

சற்குரு கணபதி சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி சற்குரு கணபதி சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.தட்டாஞ்சாவடி சற்குரு கணபதி சுவாமி ஜீவ சமாதியில் புதிய கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த 24ம் தேதி துவங்கியது.25ம் தேதி வாஸ்து சாந்தி, 26ம் தேதி முதற்கால யாகசாலை பூஜை, 27ம் தேதி இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை 7.௦௦ மணிக்கு கோபூஜை நடந்தது. நான்காம் கால யாகசாலை பூஜை, யாத்ரா தானம், கலச புறப்பாடு நடந்தது. காலை 9.45 மணிக்கு விமானம், கோபுரம், மூலவருக்கு கும்பாபிஷேகம் நடந்தது.திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், சென்னை வேலாயுதன் சுவாமிகள், காஞ்சிபுரம் ஜெயராம் சுவாமிகள் கலந்து கொண்டனர். திரளான பக்தர்கள் ஜீவ சமாதியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !