உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலப்பர் கோயில் விழாவிற்கு பழனியில் இருந்து விபூதி ஏற்பாடு

வேலப்பர் கோயில் விழாவிற்கு பழனியில் இருந்து விபூதி ஏற்பாடு

ஆண்டிபட்டி:  மாவூற்று வேலப்பர் கோயில் விழாவிற்கு பழனியில் இருந்து விபூதி கொண்டு வர ஹிந்து அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டிபட்டி அருகே உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் சுனை நீர் இக்கோயிலின் சிறப்பு. கடந்த சில மாதங்களாக மலைப்பகுதியில் மழை இல்லாததால் தற்போது சுனையில் குறைந்த அளவே நீர்வரத்து உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் சித்திரை முதல் தேதியில் விழா நடைபெறும். தொடர்ந்து 4 வாரம் குறிப்பிட்ட நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். பக்தர்கள் காவடி, பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துவர். கோயில் விழாவிற்கு 300 முதல் 400 கிலோ வரை தேவைப்படும் விபூதி பழனியிலிருந்து வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !