வீரராகவரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசை!
ADDED :4868 days ago
திருவள்ளூர்:ஆடி அமாவாசையை முன்னிட்டு, நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வீரராகவரை தரிசித்தனர்.திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை முதல், தமிழகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கோவில் குளத்தில் நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர், நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.இதற்காக, வீரராகவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்திருந்தது.