ஆடி அமாவாசை திருவிழா தேனி கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :4869 days ago
தேனி: ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, ஆண்டிபட்டி வேலப்பர் கோயில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேனி வீரப்ப அய்யனார் கோயிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம் பெருமாள் கோயில், தேனி கணேச கந்த பெருமாள் கோயில், அல்லிநகரம் கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேனி பெத்தாட்ஷி விநாயகர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. சுருளி அருவியில் தண்ணீர் வரத்து இல்லாததால், நேர்த்திக்கடன் செலுத்த வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். குல தெய்வம் கோயில்களுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.