உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

எமனேஸ்வரம்: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தனிச்சன்னதியில் அருள் பாலிக்கும் ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது.

இக் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவையொட்டி, நேற்று காலை 9:30 மணிக்கு அலர்மேல்மங்கை, பத்மாவதி தாயார், ஸ்ரீநிவாச பெருமாள் சன்னதியில் இருந்து புறப்பட்டனர். தாயார் மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பெருமாள், தாயார் மாலைமாற்று நிகழ்ச்சிகள் மற்றும் திருமண சடங்குகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !