உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹிந்து திருவிழாக்களில் கடை வைக்க அனுமதி

ஹிந்து திருவிழாக்களில் கடை வைக்க அனுமதி

 உடுப்பி:ஹிந்து திருவிழாக்களில், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்களும் கடை வைக்க அனுமதிக்க கோரி, உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகளை, முஸ்லிம் வர்த்தகர்கள் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

ஹிந்து கோவில் திருவிழாவின் போது முஸ்லிம்கள் கடை வைத்து வியாபாரம் செய்ய, பல கோவில் நிர்வாகங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஹிஜாப் எனப்படும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் உடை அணிந்து வந்த பள்ளி, கல்லுாரி மாணவியருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த புதிய விவகாரம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகளை, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ வர்த்தகர்கள் சந்தித்து பேசினர்.அப்போது, ஹிந்து திருவிழாக்களின் போது, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் கடை வைக்க தடை விதித்திருப்பது வருத்தம் அளிக்கிறது. கடையை நம்பி பலர் வாழ்க்கை நடத்துகின்றனர். இந்த தடையை நீக்க வேண்டும் என்றனர்.

இதற்கு மடாதிபதி கூறியதாவது:சமாதானம் ஒரு சமூகம் ஒரு இணக்கமான சூழலை பெறுவதற்கு சமாதானமும், இணக்கமான சகவாழ்வும் மிகவும் அவசியமானது. சமூகத்தின் எந்தவொரு பிரிவினரும் சமாதானம் இன்றி இந்த நோக்கத்தை அடைய முடியாது.ஹிந்து சமுதாயம் நீண்ட காலமாக வலியையும், துயரத்தையும் அனுபவித்து வருகிறது. பல கசப்பான அனுபவங்களால், ஹிந்து சமுதாயம் வேதனையில் உள்ளது. ஒரு சில மதத் தலைவர்களின் பரஸ்பர விவாதங்களால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது. அடிமட்டத்தில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.நம்பிக்கை ஒரு பிரிவினரோ அல்லது குழுவோ தொடர்ந்து அநீதியை எதிர்கொள்ளும் போது, அதனிடம் இருந்து விரக்தியும், கோபமும் கொட்டுகிறது. விரக்தியடைந்த ஹிந்து சமுதாயம் அநீதிகளால் சலித்து விட்டது. நல்லிணக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மீண்டும் இதுபோன்ற ஹிந்து சமுதாயத்திற்கு எதிரான சம்பவங்கள் நடக்காமல் இருந்தால், நல்லிணக்கம் ஏற்படும் என நம்புகிறோம்.

அதே வேளையில், இந்த விவகாரத்தில் மூன்றாவது நபரின் மத்தியஸ்தம் தேவையில்லை. ஹிஜாப் விவாதம், முஸ்லிம் வியாபாரிகளின் பொருளாதாரப் புறக்கணிப்பு போன்றவை நடந்துள்ளன.மேலும் அநீதியை எதிர்கொண்டவர்கள் பிரச்னையின் மூல காரணத்தைத் தீர்க்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளனர்.தவறு செய்தவர்களை சமுதாயம் தண்டிக்கட்டும். தவறு செய்தவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தட்டும். ஒருவர் செய்யும் தவறான செயல்கள், ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கும். தவறு செய்பவர்களை சமூகம் ஆதரிக்கவில்லை என்றால், ஹிந்து சமுதாயம் வேதனை அடையாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !