அருப்புக்கோட்டை முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
ADDED :1326 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. மேளதாளத்துடன் கொடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்பு கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து 15 நாட்கள் நடக்கும் விழாவில், 8 ம் நாள் விழாவாக பொங்கல் பண்டிகை நடைபெறும். 9 ம் நாள் விழாவாக நடக்கும் பூக்குழி இறங்குதல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.