வாடிப்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
ADDED :1325 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி இன்று காலை விக்னேஷ் பட்டர் தலைமையில் அனுக்ஞை, விக்னேஸ்வர சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது.கோயில் பிரகாரத்தில் பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி, அம்மன் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. விழா நாட்களில் அம்மன் தினமும் மாலை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். முக்கிய நிகழ்வாக ஏப்.,13 திக்விஜயம், ஏப்., 14 திருக்கல்யாணம், ஏப்.,15 மாலை தேரோட்டம் நடக்கிறது.