நாவா முகுந்த கோவில் திருவுற்சவம் ஏப்., 9ம் தேதி ஆரம்பம்
பாலக்காடு: நாவா முகுந்தா கோவில் திருவுற்சவம் ஏப்., 9ம் தேதி முதல் ஆரம்பம்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருநாவாயாவில் உள்ளன புகழ்பெற்ற நாவா முகந்தா கோவில். பாராதப்புழை ஆற்றின் கரையோரம் உள்ள இக்கோவிலின் திருவுற்சவம் ஏப். 9ம் தேதி திரவ்யகலசத்துடன் துவங்குகின்றன. ஏப்., 24ம் தேதி ஆறாட்டுன் திருவுற்சவம் நிறைவுபெறுகின்றன.
ஆச்சாரங்களுக்கும் சடங்குகளுக்கும் தாந்திரிக பூஜைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து நடத்தும் திருவஞ்சவம் சகல உயிரினங்களுக்கும் சவுக்கியம் அளிக்கும் மங்கள உற்சவமாகும். 9ம் தேதி திரவியகலசத்திற்கு கல்புழை தந்திரிகள் தலைமை வகிக்கின்றனர். 14ம் தேதி பிரம்மகலச அபிஷேகத்துடன் திரவிய கலசம் நிறைவடைகின்றன. தொடர்ந்து உற்சவத்தையொட்டியுள்ள கொடியேற்றம் நடக்கும். பத்னி சமேத விஷ்ணு என்பதால் குழந்தை பாக்கியத்திற்கு இங்கு அஷ்டபதி, லட்சுமி நாராயணா பூஜை, மகாலட்சுமிக்கு சுற்று விளக்கு, மங்கல்லியசூக்தம் ஆகியவை வழிபாடுகள் நடத்துவது உத்தமம். இங்கு உப தேவரான கணபதிக்கு "ஒற்றை அப்பம்" நேர்ந்தால் விக்னங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது பழமை மக்கள் கூறுகின்றனர். விஷ்ணுசகஸ்ரநாம புஷ்பாஞ்சலி வழிபாடு செய்தால் துன்பங்களுக்கு தீர்வு காண்பதோடு ஆயுள் ஆரோக்கியவும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி அம்வாசியில் நடக்கும் பலி தர்ப்பணம் நிகழ்ச்சி மிக சிறப்புடையதாகும்.