விளமல் பதஞ்சலி மனோகர் கோவிலில் அமாவாசை வழிபாடு
ADDED :1461 days ago
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் அமாவசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருவாரூர் அருகே விளமலில் மிகவும் பழமை வாய்ந்த பதஞ்சலி மனோகரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் அமாவாசை, பவுர்ணமியில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான நிகழ்ச்சி ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடந்து வருகிறது. நேற்று 31ம் தேதி அமாவாசையை முன்னிட்டு பல்வேறுப்பகுதியில் இருந்து சிவ பக்தர்கள் பிதுர் தோஷத்திற்காக வந்தனர். பின்னர் கோவிலில் நடந்த சிறப்பு அபிஷேக அலங்கார, ஆராதனையில் பங்கேற்றனர். நடந்த வழிபாட்டில் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.