ஏழு குருக்கள் ஒரே தலத்தில்
ADDED :1313 days ago
குருமார்கள் ஏழுபேர் உள்ளனர். அவர்கள் தேவகுரு பிரகஸ்பதி, அசுரகுரு சுக்கிராச்சாரியார், ஞான குரு சுப்ரமணியர், பரப்பிரம்ம குரு பிரம்மா, விஷ்ணு குரு வரதராஜர், சக்தி குரு சவுந்தர்ய நாயகி, சிவகுரு தட்சிணாமூர்த்தி. இவர்கள் அனைவரையும் திருச்சி அருகிலுள்ள உத்தமர் கோயிலில் தரிசிக்கலாம். ஆழ்வாரால் மங்களாசானம் செய்யப்பட்ட திவ்யதேசமான இங்கு பிரம்மாவிற்கும் சன்னதி உள்ளது. குருபகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபட்டவருக்கு குருதோஷம் நீங்கும். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தம் தேவியருடன் காட்சி தரும் அற்புதத்தலம் இது.
தொடர்புக்கு 0431 – 259 1466