உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

காரைக்குடி; காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று நடந்தது. காலையில் பெருமாள் சிறப்பு திருமஞ்சனத்தை தொடர்ந்து, நித்தியபடி பூஜைகள் முடிந்து, மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 5.55 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து, பெருமாள் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 6 மணி முதல் இரவு வரை இடைவிடாது பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, பரம்பரை அறங்காவலர் மீனாட்சி, செயல் அலுவலர் ராமநாதன் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !