வனபோஜன உற்சவம்!
ADDED :1363 days ago
காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் பொங்கல் தினத்தன்று இரவு 10 மணிக்கு உற்சவர் புறப்பட்டு பழைய சீவரம் லட்சுமி நரசிம்மர் கோயிலிற்கு எழுந்தருளி அங்கே வனபோஜன உற்சவம் கண்டருள்வார். அது முடிந்ததும் 140 படிகளைக் கடந்து குன்றின் மீதுள்ள மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அங்கே விசேஷ தீபாராதனை நடந்த பின் லட்சுமி நரசிம்மர் சன்னதிக்கு எழுந்தருளி அங்கிருந்து பாலாற்றங்கரையில் உள்ள திருமுக்கூடல் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலிற்குச் செல்வார். அன்று மூவரையும் தரிசிப்பது மகத்தான பலன்களைக் கொடுக்கும்.