காஞ்சி வரதரை பூஜிக்கும் பிரம்மன்!
ADDED :1314 days ago
காஞ்சி வரதராஜர் கோயிலில் சித்ரா பவுர்ணமியன்று நள்ளிரவில் பிரம்மன் வந்து வழிபடுவதாக ஐதீகம். அன்றைய தினம் இரவு பூஜையின் போது பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் பட்டாசார்யர்கள் அதன்பின் கருவறையை விட்டு வெளியேறி விடுவார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு கருவறைக்குள் சென்றால் பிரசாதத்தில் நறுமணம் கமழும்.