பரிகாரமாக வாழை மரத்துக்கு கல்யாணம் நடத்துவது ஏன்?
ADDED :1362 days ago
ஜாதகத்தில் களத்திரதோஷம் அல்லது பர்த்ரு தோஷம் என ஒன்று உண்டு. அதாவது பெண் ஜாதகமானால் கணவனுக்கும், ஆண் ஜாதகமானால் மனைவிக்கும் ஆயுள் கண்டம் ஏற்படும். இப்படி நிகழ்ந்தால் வேறு திருமணம் செய்ய வேண்டிய சூழல் வரும். அதைத் தடுக்க கதலீ விவாகம் என முதலில் வாழை மரத்துக்கு கல்யாணம் செய்து பிறகு முறையான திருமணம் செய்தால் அது இரண்டாவது திருமணத்துக்கு ஒப்பானதாகி தோஷம் நீங்கி விடும் என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மை.