உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உச்சிமாகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா

உச்சிமாகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா

பாலமேடு: பாலமேடு அருகே டி.மேட்டுப்பட்டி உச்சிமாகாளியம்மன் கோயில் 41ம் ஆண்டு பங்குனி பொங்கல் உற்சவ விழா 4 நாட்கள் நடந்தது. சுமங்கலி பூஜை, திருவிளக்கு பூஜை நடந்தன. காப்பு கட்டிய பக்தர்கள் பொங்கல் வைத்தும், அங்கப்பிரதட்சணம், பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் அம்மன் பூஞ்சோலை செல்வதுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை மருது பாண்டியர் மற்றும் அகமுடையார் பேரவையினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !