அடி மலை மாதேஸ்வரர் கோவிலில் யுகாதி திருவிழா
                              ADDED :1307 days ago 
                            
                          
                           ஈரோடு: சத்தியமங்கலம் அருகே  காளியூரை அடுத்த அடி மலை மாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் யுகாதி பண்டிகையன்று மட்டுமே திருவிழா நடக்கும். வெள்ளிகிழமை மாலை தீர்த்தக் குடம் எடுத்து வந்தனர். இரவு அபிஷேக பூஜை நடந்தது. இன்று  அதிகாலை யாக பூஜை, வேப்பம்பூ அபிஷேக பூஜை, ஸ்ரீ நந்திதேவர் சிறப்பு பூஜை , ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் பூஜை , நடந்தது. தொடர்ந்து 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவிற்கு கே.என்.பாளையம், வேட்டுவன் புதூர், நால்ரோடு, காளியூர், மோதூர், அத்தாணி, உள்ளிட்ட ஊர்களிலிருந்து 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் மாடு, நாய், உருவ பொம்மைகளை  கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.