அகலூர் ஜெயின் கோவிலில் யுகாதி தேரோட்டம்
ADDED :1365 days ago
செஞ்சி: அகலுார் ஜெயின் கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
செஞ்சியை அடுத்த அகலூர் கிராமத்தில் ஆதீஸ்வரர் ஜெயின் கோவிலில் நேற்று தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு திருத்தேர் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை தரனேந்திரர், பத்மாவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தேரில் ஏற்றி முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. இதில் திரளான ஜெயின் சமூகத்தினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.