உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆகாச ராயர் கோவில் கும்பாபிஷேகம் : முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம்

ஆகாச ராயர் கோவில் கும்பாபிஷேகம் : முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம்

அவிநாசி: அவிநாசி, ஆகாச ராயர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக, நேற்று ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், சுந்தரமூர்த்தி நாயனரால் பாடல் பெற்றதுமான, அவிநாசி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலின் உப கோவிலாக மங்கலம் ரோட்டில், ஆகாச ராயர் கோலில் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிஷேகம் நடத்தி, 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக, நேற்று முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம், கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டி முன்னிலையில் நடந்தது. ராயம்பாளையம், கருணைப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பக்தர்கள் பங்கேற்றனர். இருப்பினும், இந்த கூட்டம் நடப்பது குறித்து, யாருக்கும் தெரியாததால், சொற்ப அளவிலான பக்தர்கள், உபயதாரர்கள் மட்டுமே பங்கேற்றனர். அடுத்து நடத்தப்படும் கூட்டம் தொடர்பாக, முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !