உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரம்ஜான் பண்டிகைக்கு ஜமாத்களுக்கு அரிசி வழங்கல்

ரம்ஜான் பண்டிகைக்கு ஜமாத்களுக்கு அரிசி வழங்கல்

 ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட 25 ஜமாத்களுக்கு தி.மு.க., சார்பில் அரிசி சிப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் நோன்பு கடந்த 3ம் தேதி துவங்கியது. அதனையொட்டி, ஜமாத்தில் தயாரிக்கப்பட்ட நோன்பு கஞ்சி, அனைத்து மதத்தினருக்கும் வழங்கப்படும்.

நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக அனைத்து ஜமாத்களுக்கும் அரிசி சிப்பங்கள் வழங்க வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., உத்தரவிட்டுள்ளார்.இதையொட்டி ரிஷிவந்தியம் தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள், பொறுப்பாளர் பாரதிதாசன், சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், துணைச் சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள், தங்களது பகுதிக்குட்பட்ட ஜமாத்களுக்கு நேரில் சென்று அரிசி சிப்பங்களை வழங்கினர். ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் உள்ள 25 ஜமாத்களுக்கு, 681 சிப்பம் அரிசி வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !