உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரையில் சித்திரை திருவிழா, வைகை ஆற்றில் சீரமைப்புப் பணிகள்

மானாமதுரையில் சித்திரை திருவிழா, வைகை ஆற்றில் சீரமைப்புப் பணிகள்

மானாமதுரை: மானாமதுரையில் 2 வருடங்களுக்குப் பிறகு சித்திரைத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் வைகையாற்றை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மானாமதுரையில் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளதுஅதேபோன்று வீர அழகர் கோயில் வருகிற 12ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்க உள்ளது. விழாக்களின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் ஏப்.14ம் தேதியும், தேரோட்டம் மற்றும் எதிர்சேவை நிகழ்ச்சி ஏப்.15ம் தேதியும், அழகர் ஆற்றில் இறங்குதல் ஏப்.16ம் தேதியும்,நிலாச்சோறு நிகழ்ச்சி ஏப்.17ம் தேதியும் நடைபெற உள்ளது.இந்தக் கோயில்களில் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாக்களின்போது வைகை ஆற்றுக்குள் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். மேலும் வைகை ஆற்றுக்குள் பொழுதுபோக்கு அம்சங்களான ராட்டினங்கள் மற்றும் சிறுவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், சர்க்கஸ் போன்றவை ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருக்கும். மேலும் நிலாச்சோறு நிகழ்ச்சிய மானாமதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வீடுகளில் சமைத்த உணவு பொருட்களை மானாமதுரை வைகை ஆற்றுக்குள் கொண்டுவந்து உறவினர்களோடு சாப்பிட்டு செல்வது வழக்கம்.இதற்காக மானாமதுரை நகராட்சி சார்பில் வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறதுஇப்பணிகளை மானாமதுரை நகராட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடி,துணைத்தலைவர் பாலசுந்தரம்,கமிஷனர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் தங்கதுரை,நகர செயலாளர் பொன்னுச்சாமி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் பார்வையிட்டு பணிகளை விரைவில் முடிக்குமாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !