உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கொடியேற்றம்

மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கொடியேற்றம்

கூடலூர்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடியில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.

தமிழக-கேரள எல்லையில் கூடலூர் வின்னேற்றிப் பாறை மலை உச்சியில் தமிழக வனப் பகுதியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஏப். 16ல் நடைபெறவுள்ள விழாவிற்கு தேனி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பளியன்குடியிலிருந்து கோயில் வரை உள்ள 6.6 கி.மீ., வனப்பாதையை தமிழக வனத் துறையினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி இன்று கோயில் அடிவாரம் பளியன்குடியில் நடந்தது. மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ரேஞ்சர் அருண்குமார், நகராட்சித் தலைவர் பத்மாவதி, கவுன்சிலர்கள் லோகந்துரை, தினகரன், கமிஷனர் சித்தார்த்தன், அறக்கட்டளை செயலாளர் ராஜ் கணேசன், பொருளாளர் முருகன், நிர்வாக குழு உறுப்பினர்கள் நேரு, ஜெயபாண்டியன், சரவணன், பஞ்சுராஜா, காசிராஜன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !