ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கொடியேற்று விழா
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் கோயில் வளாகத்தில் உலாவந்து கொடிக்கம்பம் முன்பு நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்த பின் கொடி ஏற்றினர். 10 நாள் நிகழ்ச்சியில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மண்டகப்படி அமைத்து விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தங்கலதா, தக்கார் வைரவன் ஏற்பாட்டில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பெரியகுளம் சப் கலெக்டர் ரிஷப் முன்னிலையில் கொடியேற்று விழா, சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா, துணைத் தலைவர் ஜோதி, ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் நரசிம்மன் செய்திருந்தார். ஆண்டிபட்டி டி.எஸ்.பி.,தங்க கிருஷ்ணன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.