நடராஜர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1323 days ago
நிலக்கோட்டை: நிலக்கோட்டை கோவிலில் நடராஜர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. முன்னதாக நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் துவங்கின. விநாயகர் பூஜையுடன் விளக்கு, கோ, லட்சுமி பூஜை என அடுத்தடுத்து நடந்தது. நேற்று மாலை நடராஜரின் ஐம்பொன் சிலை அகோபில நரசிம்ம பெருமாள் கோவிலில் இருந்து ஊர்வலமாக நடராஜர் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் நடராஜர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஆடிட்டர் சிற்றம்பல நடராஜன், ஹிந்து சமய அறநிலைத் துறை சார்பில் செயல் அலுவலர் ராமதிலகம் செய்து வருகின்றனர்.