எமனேஸ்வரத்தில் ராமநவமி விழா
ADDED :1323 days ago
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் அனுமார் கோயிலில் ராமநவமி விழா நடந்தது. இக்கோயிலில் கடந்த இரண்டு நாட்களாக மூலவர் அனுமன் வெற்றிலை மாலை, சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவர் அழகர், நரசிம்மன் உள்ளிட்ட அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 10 நாட்கள் உற்சவம் நடக்கிறது.