உத்தரகோசமங்கையில் சித்திரை திருவிழா ஏப்., 8ல் கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :1323 days ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையான சிவாலயமாக திகழ்கிறது.
சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு வருகிற ஏப்.,8 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. தொடர்ந்து பத்து நாட்களும் காலையில் பல்லக்கிலும், இரவில் சிம்மம், அன்னம், கிளி, காமதேனு, ரிஷபம், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் உள் மற்றும் வெளி பிரகார வீதியுலா புறப்பாடு நடக்க உள்ளது. ஏப்.,16 அன்று (சனிக்கிழமை) காலையில் மங்கைபெருமாள் குதிரை வாகனத்திலும், மாலையில் தேரோட்டமும் நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.