சிவன் கோவில் கருவறையில் மூவலர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்
ADDED :1322 days ago
வேலுார்: சிவன் கோவில் கருவறையில் மூவலர் மீது சூரிய ஒளி படும் நிகழ்வு, 1,000 ஆண்டு பழமையான, வேலுார் அருகே உள்ள கோவிலில் நடந்தது. வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே, விண்ணம்பள்ளியில், 1,000 ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் என்கிற பொன்னீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுக்கு ஒரு முறை கருவைறையில் உள்ள சிவபெருமாள் மீது சூரிய ஒளி படும் நிகழ்வு நடக்கும். அந்த நிகழ்வு நேற்று காலை 6:00 முதல், 6:30 மணி வரை நடந்தது. தொடர்ந்து ஒரு வாரம் இதுபோல சூரிய ஒளிக்கதிர்கள் சிவபெருமான் மீது பட்டு ஒளிரும். இந்த நிகழ்வை பார்த்து சிவபெருமானை தரிசித்தால், பாவம் விலகும், புண்ணியம் கிடைக்கும், தன லாபம் வரும் என்பது சித்தர்கள் வாக்கு. ஆண்டுக்கு ஒரு முறை இதே நாளில் இது போன்ற நிகழ்வு தொடர்ந்து, 1,000 ஆண்டுகளாக நடக்கிறது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.