உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாமுண்டி மலைக்கு ரோப் வே அமைக்க வேண்டாம்! மன்னர் வம்சத்தின் பிரமோதா தேவி வேண்டுகோள்

சாமுண்டி மலைக்கு ரோப் வே அமைக்க வேண்டாம்! மன்னர் வம்சத்தின் பிரமோதா தேவி வேண்டுகோள்

மைசூரு : மைசூரு சாமுண்டி மலைக்கு ரோப் வே எனப்படும் இரும்பு கம்பி கூண்டு பாதை அமைக்க வேண்டாம் என்று அரசை வலியுறுத்துகிறேன். மூடப்பட்ட ராஜேந்திர விலாஸ் அரண்மனை, ஹோட்டலாக தொடரும், என மன்னர் வம்சத்தின் பிரமோதா தேவி கூறினார்.மைசூரு உடையார் மன்னர் வம்சத்தை சேர்ந்த பிரமோதா தேவி, அரண்மனையில் நேற்று அவசர செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:சாமுண்டி மலைக்கு ரோப் வே அமைப்பதாக மாநில பட்ஜெட்டில் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கார், பைக்கில் மலைக்கு செல்ல 20 நிமிடங்கள் போதும்.படிக்கட்டுகளில் ஏறி செல்ல 30 நிமிடங்கள் போதுமானது. இப்படி இருக்கும் போது, ரோப் வே திட்டம் அவசியமில்லை.சாமுண்டி மலையின் இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும். மலையின் மீது வணிக வளாகம் கட்ட கூடாது. பூர்வீக குடிமக்களை தவிர வேறு யாரும் தங்க அனுமதிக்க கூடாது. கட்டடம் கட்டுவதற்கு உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.லேண்ட்ஸ் டவுன் கட்டடம் மற்றும் தேவராஜா சந்தையை இடிக்க கூடாது. இந்த கட்டடங்களை இடிப்பது மைசூரின் பாரம்பரியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இரண்டு கட்டடங்களையும் சீரமைக்க வேண்டும் என்றால், அவற்றை புதுப்பிக்க தயாராக இருக்கிறோம்.

பாரம்பரியத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகவே, ஜெகன்மோகன் அரண்மனை மற்றும் ராஜேந்திர விலாஸ் அரண்மனையை புதுப்பித்துள்ளோம். புராதன கட்டடங்கள் விவகாரத்தில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்.சாமுண்டி மலையில், 120 அடி உயர ராஜேந்திர விலாஸ் அரண்மனை பல நாட்களாக சுற்றுலா பயணியருக்கு தடை விதித்து மூடப்பட்டுள்ளது. அந்த அரண்மனை கட்டடத்தின் வலிமை சிறப்பாக உள்ளது. நிபுணர்கள் கருத்து பெற்று பாரம்பரிய பாணியில் புதுப்பிக்கப்படும்.ராஜேந்திர விலாஸ் அரண்மனை 1975 முதல் ஹோட்டலாக நடத்தப்பட்டு, 1995ல் மூடப்பட்டது. கோபுரத்தை புதுப்பிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.அது ஹோட்டலாகத் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !