உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கதர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே கதர் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

சிறுமுகை அடுத்த பெள்ளேபாளையம் ஊராட்சி, சென்னம்பாளைத்தில் கதர் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கணபதி, முருகன் ஆகிய சன்னதிகள் உள்ளன. திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. விமானம் கலசம் நிறுவுதல், யாகசாலை வேள்வி பூஜைகள் செய்தனர். அதைத்தொடர்ந்து நேற்று காலை, 8:30 மணிக்கு மேல், யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்களை, கோவிலைச் சுற்றி வலம் வந்து, கோபுர கலசத்தின் மீதும், சுவாமிகள் மீதும் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பாலுசாமி சாஸ்திரிகள், சுரேஷ்பாபு சாஸ்திரி ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். வேத மாதா காயத்ரி குழுவினர் வேள்வி வழிபாடுகளை செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, ஊர் கவுடர், ஊர் செட்டுமை, விழா குழுவினர், இளைஞர் அணியினர் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !