வாடிப்பட்டி கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :1318 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி பகவதியம்மன், முத்தாலம்மன், காளியம்மன் கோயில் உற்ஸவ விழா மூன்று நாட்கள் நடந்தது. முதல் நாள் அம்மனை கோயிலுக்கு அழைத்து வந்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர். காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அங்கப்பிரதட்சணம், பால்குடம் அக்னிச்சட்டி, மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்று நீரேத்தான் தெப்பத்தில் கரைத்தனர்.ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்தனர்.