மலையாண்டி கோயில் திருவிழா
ADDED :1315 days ago
கொட்டாம்பட்டி: குன்னங்குடிபட்டி மலையாண்டி கோயில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏப். 1 முதல் காப்பு கட்டி விரதமிருந்தனர். எட்டாம் நாளான நேற்று பக்தர்கள் பூசனார் கோயிலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவை முன்னிட்டு செய்யப்பட்ட முருகன் சிலையை நிர்வாகிகள் தேரில் வைத்து கோயிலை சுற்றி வர தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குன்னங்குடிபட்டி, சாவரப்பட்டி, அரையினிப்பட்டியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.