உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட கோயில்களில் அன்னதான திட்டத்திற்கு ரூ. 3500 ஆக உயர்வு

இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட கோயில்களில் அன்னதான திட்டத்திற்கு ரூ. 3500 ஆக உயர்வு

சிவகாசி: இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட கோயில்களில் அன்னதான திட்டத்திற்கு ரூ. 2500 லிருந்து ரூ. 3500 ஆக உயர்த்தப்பட்டது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட அனைத்து கோயில்களிலும் அன்னதானத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின்படி தினமும் 100 பேருக்கு மதிய உணவு வழங்கப்படும். அன்னதான திட்டத்திற்கு என தனி நபர்கள் நன்கொடை கொடுக்கும் பட்சத்தில் அவர்களின் பெயரில் அன்னதானம் வழங்கப்படும். இதற்கான தொகை ரூ. 2500 ஆக இருந்தது. நன்கொடை கொடுப்பவர் ஆண்டில் தனக்கு இந்த நாள் தான் வேண்டும் என நினைக்கும் பட்சத்தில் ரூ. 25 ஆயிரம் முன் பணமாக கட்ட வேண்டும். இந்நிலையில் ஏப். 1 முதல் அன்னதான திட்டத்திற்கு ரூ. 3500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தேவைப்படும் நாளில் அன்னதானம் வழங்குவதற்கு ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் 2022 பிப். 8 ல் அறிவித்திருந்தார். பெரும்பாலான கோயில்களில் முன்பணம் பெற்றிருந்ததால் ஏப். 1 முதல் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அந்தந்த கோயில்களில் வைத்துள்ளனர். அதன்படி சிவகாசி பெருமாள் கோயில், சிவன் கோயிலில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !