மாதா அமிர்தானந்தமயி மடத்தில் சுதர்சன ஹோமம்
ADDED :1356 days ago
திருப்பரங்குன்றம்: மதுரை பசுமலை மாதா அமிர்தானந்தமயி மடம் பிரம்மஸ்தானம் ஆலயம் 27வது ஆண்டு விழா நேற்று துவங்கியது. காலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சத்சங்கம், பஜனை, அஷ்டோத்தர அர்ஜனை, சகஸ்ரநாம பாராயணம், விஷ்ணு பாராயணம் நடந்தது. மாலையில் சுதர்சன ஹோமம், பஜனை நடந்தது. இன்றும் பூஜைகள் நடக்கிறது.