சித்திரை விஷூ பூஜைக்கு சபரிமலை நடை திறப்பு
சபரிமலை: சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கிறது. 18–ம் தேதி வரை நடை திறந்திருக்கும். இன்று மாலை மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து ஸ்ரீகோயிலில் விளக்கேற்றிய பின்னர் 18–ம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்ப்பார்.
வேறு விசேஷ பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 8:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை காலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் நெய்யபிேஷகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கும். எல்லா நாட்களிலும் காலையில் கணபதிேஹாமம், உஷபூஜை, மதியம் களபாபிேஷகம், உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிேஷகம், இரவு அத்தாழபூஜை ஆகியவை நடைபெறும். இதனுடன் உதயாஸ்தமனபூஜை, இரவு 7:00 மணிக்கு படிபூஜை ஆகியவை நடைபெறும். 15–ம் தேதி விஷூ கனி தரிசனம் நடை பெறும். அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும், காய், கனி அலங்காரத்தில் ஐயப்பனை பக்தர்கள் வணங்க முடியும். காலை 7:00 மணி வரை பக்தர்களுக்கு தந்திரியும், மேல்சாந்தியும் கை நீட்டம் வழங்குவார்கள். 18–ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை முதல் 18–ம் தேதி வரை பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.