உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகாத்தம்மன் கோவிலில் ஆடிப்பூர பால் குட ஊர்வலம்!

நாகாத்தம்மன் கோவிலில் ஆடிப்பூர பால் குட ஊர்வலம்!

புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில் 23ம் ஆண்டு ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம் நடந்தது.நாகாத்தம்மன் கோவிலிருந்து நேற்று காலை 108 பால் குடங்களுடன் பக்தர்கள் ஜீவா காலனி, பாக்கமுடையான்பட்டு, புதுப்பேட்டை வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். நாகத்தம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. இரவு அலங்காரத்துடன் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !