உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாநல்லூர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் தேர் திருவிழா தொடங்கியது

பெருமாநல்லூர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் தேர் திருவிழா தொடங்கியது

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த பெருமாநல்லூரில் கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம லிங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.

கோவில், சித்ரா பவுர்ணமி தேர் திருவிழா நேற்று கோடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, காலை 9.00 மணிக்கு உத்தம லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் குருக்கள், பொது மக்கள், கட்டளை தாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, 14 ந் தேதி வியாழக்கிழமை இரவு 8.00 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி தருதல். 15 ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு திருகல்யாண வைபவம், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. 16 ந் தேதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டு தேர் இழுக்கின்றனர். 17 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்தில் வரிவேட்டை வருதல், 18 ந் தேதி திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு நடராஜர் அபிஷேக தரிசனம், 19 ந் தேதி விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜா, தக்கார் பெரிய மருது பாண்டியன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !