அவிநாசி கோவிலில் உழவாரப்பணி
ADDED :1314 days ago
அவிநாசி: அவிநாசி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீஸ்வரர் உழவாரப்பணிக்குழுவினர் சார்பில், உழவாரப்பணி நடந்தது. கோவிலின் அனைத்து இடங்கள், பசுமடம், நந்தவனம் உள்ளிட்ட பகுதிகள், பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில்களிலும் உழவாரப்பணி நடந்தது. இப்பணியில், ஈரோடு, திருப்பூர், அவிநாசிஉள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 150 பேர் பங்கேற்றனர்.