தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் ஆரோக்கியத்திற்கான பயிலரங்கம்
ADDED :1376 days ago
தஞ்சாவூர் : தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் இயற்கை வைத்தியம் மற்றும் ஆரோக்கியத்திற்கான பயிலரங்கம் நேற்று நடைபெற்றது. டாக்டர் கே. கலைமகள் மற்றும் அவர்களது குழுவினரின் அருமையான பயிலரங்கம் நடைபெற்றது. தோப்புக்கரணம், ஆசனப் பயிற்சிகள், மூலிகை சாறு உண்ணுதல், மூச்சு தியானம் மற்றும் உன்னத இசையால் உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வும் நடைபெற்றன. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.