சோழவந்தானில் ராமநவமி மஹோத்ஸவம்
ADDED :1379 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அக்ரஹாரம் சந்தான கோபால கிருஷ்ணன் கோயில் முன் ராம பக்த சபா சார்பில் ராமநவமி உற்சவம் ராமநாமபாராயண அர்ச்சனையுடன் ஏப்.,7ல் துவங்கியது. ராமஜனனம் குறித்து பாலசுப்ரமண்ய சாஸ்திரிகள் சொற்பொழிவாற்றினார். ஏப்.,8 ஸ்ருதி சீனிவாசன் குழுவினரின் வீணை கச்சேரி நடந்தது. டாக்டர்.கணேஷ் பாகவதர் குழுவினரின் அஷ்டபதி பஜனையும், நேற்று காலை உஞ்சவிருத்தி பஜனையை தொடர்ந்து சீதா கல்யாண மஹோத்ஸவம், ஆஞ்சநேய உற்ஸவமும் நடந்தன. முன்னதாக பெண்கள் திருமண சீர்வரிசை எடுத்து வந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சபா நிர்வாகிகள் செய்தனர்.