திருப்பரங்குன்றம் கோயில் மூலவர்களுக்கு நாளை கவசங்கள் சாத்துப்படி
ADDED :1582 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஏப்.14) மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம், மற்றவர்கள் கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளிக் கவசங்கள் சாத்தப்படியாகிறது. காலை முதல் இரவு கோயில் நடை சாத்தும்வரை கவசங்கள் சாத்துப்படி செய்யப்பட்டிருக்கும். புத்தாண்டு சிறப்பு பூஜை, பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியும் நடக்கும்.