58 ஆண்டுகளுக்குப் பின் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா
ADDED :1307 days ago
அலங்காநல்லுரர்: அலங்காநல்லுரர் அருகே 58 நிர், உசிலம்பட்டியில் கரந்தமலை அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா 58 ஆண்டுகளுக்கு பின் நடந்தது.
கிராம முத்தாலம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, பூர்ணகலா, புஷ்கலா சமேத அய்யனார், கரந்தமலை, கருப்பு, நொண்டிச்சாமி, ராக்காயி, பேச்சியம்மன், கன்னிமார்கள், குதிரை சுவாமிகளை அய்யனார் கோயிலுக்கு மரியாதைகாரர்களும், கிராமமக்களும் வானவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்றனர். பொங்கல் வைத்து, சக்தி கிடாவெட்டி பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.